சென்னை : மின் கருவிப் பெட்டிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 46.92 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.06 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் ஒன்றான துபாயிலிருந்து,
ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் சென்னை வந்தது. இதில் வந்த பயணியர் இருவரின் உடைமைகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, அதிலிருந்த இரு மின் கருவி பெட்டிகளை பிரித்து பார்த்ததில், எட்டு தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும், இரண்டு தங்க சங்கிலிகளும் உடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றை மதிப்பிட்டதில் 46.92 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.06 கிலோ தங்கம் இருந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியர் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.