வெள்ளவேடு, : வெள்ளவேடு அருகே, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபரின் வீட்டை அடித்து நொறுக்கிய 13 பேர் மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
வெள்ளவேடு அடுத்த, உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சதீஷ்குமார், 25. இவர், அப்பகுதியைச் சேர்ந்த ௧௦ம் வகுப்பு மாணவியான 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.நேற்று முன்தினம், மாணவியின் வீட்டில் புகுந்த சதீஷ்குமார், மாணவிக்கு முத்தம் கொடுத்து, அத்துமீறலில் ஈடுபடடுள்ளார்.
அப்போது அந்த மாணவி மற்றும் அவரது தாய் சத்தம் போடவே, சதீஷ்குமார் இருவரையும் தாக்கி தப்பியோடினார்.ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள், சதீஷ்குமாரின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி அவரது உறவினர் புஷ்பா, 62, என்பவரை தாக்கியுள்ளனர். சதீஷ்குமார் வீட்டின் அறையில் பதுங்கியிருக்கவே தப்பினார்.இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரையடுத்து, வெள்ளவேடு போலீசார், சதீஷ்குமாரை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்
.மேலும், புஷ்பா வெள்ளவேடு போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில், வீட்டிற்குள் புகுந்து தன்னை தாக்கி, பொருட்களை சேதப்படுத்தியதாக கூறியுள்ளார்.அதையடுத்து, வெள்ளவேடு போலீசார், புஷ்பாவை தாக்கிய மாணவியின் உறவினர்கள் 13 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.