கோவை:சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை, வெள்ளலூர் பஸ் ஸ்டாப் பகுதியிலுள்ள ஈ.வே.ரா., சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி பொடி தூவப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள சி.சி.டிவி.,வில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் கார்த்திக்,26 அவரது நண்பர் மோகன் ராஜ்,28 ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில்அடைத்தனர்.இதனிடையே, இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். கமிஷனரின் 'குண்டாஸ்' உத்தரவு குறித்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இருவருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.