கும்மிடிப்பூண்டி : விசாரணைக்கு அழைக்க சென்ற போலீஸ் எஸ்.ஐ., கையை கடித்து, தப்பி ஓடிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அருகே, ஆத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ், 25. இவர் மீது, கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன.
ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக, அவரை அழைத்து வர, கும்மிடிப்பூண்டி எஸ்.ஐ., பாஸ்கர், காவலர் விமல்ராஜ் ஆகியோர் யுவராஜ் வீட்டிற்கு நேற்று சென்றனர்.யுவராஜ் குடும்பத்தார் போலீசாரை தடுக்க முயன்ற போது, தள்ளு முள்ளு ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில், எஸ்.ஐ., பாஸ்கர் கையை, யுவராஜ் கடித்துவிட்டு தப்பி ஓடினார். காவலர் விமல்ராஜும் காயம் அடைந்தார். போலீசார் விரட்டி சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை. அவர் குடும்பத்தாரும் தலைமறைவாகினர்.கடிப்பட்ட எஸ்.ஐ., பாஸ்கர், காயம் அடைந்த காவலர் விமல்ராஜ் ஆகியோர், கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.