செங்கல்பட்டு : செங்கல்பட்டு எஸ்.பி., உட்பட 29 போலீசாருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்திலும், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., அரவிந்தன், செங்கல்பட்டு ஏ.எஸ்.பி., ஆதார்ஸ் பச்சேரா உள்ளிட்டே 29 போலீசாருக்கு, நேற்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அவர்கள், மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று, வீட்டில் தனிமைப்படுத்துக்கொண்டனர். தற்போது, காஞ்சிபுரம் எஸ்.பி., டாக்டர் சுதாகர், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுஉள்ளார்.