திருப்பூர்:தாராபுரம் தளவாய்ப்பட்டினத்தில், பொங்கல் பண்டிகையொட்டி மஞ்சு விரட்டு நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரிடம் அனுமதி மறுக்கப்பட்டது.இதைக் கண்டித்து தளவாய்ப்பட்டினம் மெயின் ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் நேற்று காலை ஈடுபட்டனர். அலங்கியம் போலீசார் பேச்சு நடத்தினர். மக்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். தொடர்ந்து, தாராபுரம் ஆர்.டி.ஓ., குமரேசன் விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார். 'அடுத்த ஆண்டு நடத்த அனுமதி அளிக்கப்படும்' என்று உறுதியளித்தார். ஒரு மணி நேரமாக நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டு, மக்கள் கலைந்து சென்றனர்.