வெள்ளகோவில்:வெள்ளகோவில், முத்துார் ரோடு விநாயகர் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில், மின் துண்டிப்பு செய்து அடிக்கடி ஸ்பின்னிங் மில்களுக்கு பியூஸ் போடுவதால், வேலை நேரத்தில் தினசரி ஒரு மணி நேரம் மின்தடை ஏற்படுவதாக மின் வாரியத்தில் புகார் செய்யப்பட்டது.''இரவு நேர ஊரடங்கு காரணமாக காலை 10:00 மணிக்கு துவங்கி இரவு 10:00 மணிக்குள் பணிகளை முடிக்க வேண்டியிருக்கிறது. காலை 11:30 மணியளவில் மின்தடை காரணமாக முடங்குகிறது. ஒரு மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் வணிகர்கள் வேலை செய்ய முடியவில்லை '' என புகார் செய்துள்ளனர்.மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''பகல் நேரங்களில் மின்தடை செய்து பியூஸ் போடக்கூடாது என லைன்மேன்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தவிர்க்க முடியாத பட்சத்தில் மதிய உணவு இடைவேளையின் போது பியூஸ் போடும் வேலையை செய்ய வேண்டும். பகலில் மின் தடை ஏற்படுத்த மாட்டோம்'' என்றனர்.