பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்ற மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று பகல் 3:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, 3:30 மணியளவில் சாத்துக்கூடல் மேல்பாதி, பிள்ளையார் கோவில் அருகே கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் மகன் விஜய், 20, ஞானமணி மகன் மணிகண்டன், 19, பாஸ்கர் மகன் மணிகண்டன், 20, ஆகியோரை கைது செய்து, தலா 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.