பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சியில் குழந்தைகள் மைய கட்டடத்தை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சியில் நெய்வேலி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் ரூ 9.50 லட்சம் மதிப்பில் புதிய குழந்தைகள் மைய கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றிய சேர்மன் பாலமுருகன் தலைமை தாங்கினார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பங்கேற்று புதிய குழந்தைகள் மைய கட்டடத்தை திறந்து வைத்தார்.மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஊராட்சித் தலைவர் சக்திவேல், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பவானி, உதவி பொறியாளர் ஜெயஸ்ரீ, துணை பி.டி.ஓ., சிவசிதம்பரம், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி, ஒன்றிய கவுன்சிலர் அருள்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.