பந்தலுார்:பந்தலுாரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.,திராவிடமணி வீட்டின் முன், சாலையில், சினிமா படப்பிடிப்பு நடந்தது.நடிகர்களை பார்க்க மக்கள் கூட்டம் அதிகரித்தது. இதனை அறிந்த தாசில்தார் நடேசன்,'படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி அளித்தது,' என, முன்னாள் எம். எல்.ஏ.,விடம் கடும்வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது,'முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு எடுக்கப்படுகிறது,' என, திரைப்பட குழுவினர் கூறினர்.அதனை ஏற்று கொள்ள மறுத்த தாசில்தார் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை, தொடர்ந்து, படப்பிடிப்பு குழுவினர் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ., திராவிட மணி,'தாசில்தார் நாகரீகமற்ற முறையில் நடந்தார்,' எனக்கூறி, அவர்மீது தேவாலா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஆர்.டி.ஓ., சரவண கண்ணன் கூறுகையில்,'' படப்பிடிப்பு பிரச்னை குறித்து புகார் வந்துள்ளது. நாளை (இன்று) விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.