புகையிலை பொருட்கள் விற்பனை: கடை உரிமையாளர் கைது | நீலகிரி செய்திகள் | Dinamalar
புகையிலை பொருட்கள் விற்பனை: கடை உரிமையாளர் கைது
Added : ஜன 19, 2022 | |
Advertisement
 

பந்தலுார்:பந்தலுார் அருகே, அய்யங் கொல்லி பகுதியில் பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.அய்யங்கொல்லி அருகே பாதிரிமூலா பகுதியில் பெட்டி கடை வைத்திருப்பவர் மதியழகன்,60. இவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அமுதா, சப்--இன்ஸ்பெக்டர் சத்தியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில், புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மதியழகனை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X