கார் மீது மரம் விழுந்தது விபத்தில் 6 பேர் காயம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கார் மீது மரம் விழுந்தது விபத்தில் 6 பேர் காயம்
Added : ஜன 19, 2022 | |
Advertisement
 

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கார் மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், ஆறு பேர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.நெகமம் போலீசார் கூறியதாவது:புதுச்சேரி என்.ஆர்., காங்., அரசியல் கட்சி அலுவலகத்தில் பணியாற்றுபவர் அஸ்வின்,35. இவர், பொங்கல் பண்டிகையையொட்டி குல தெய்வம் கோவிலுக்கு செல்ல குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்றுள்ளார்.புதுச்சேரிக்கு நேற்று காரில் திரும்பினார். பொள்ளாச்சி வழியாக சென்ற போது, தாராபுரம் ரோட்டில், மரம்புடுங்கிக்கவுண்டனுார் அருகே, ரோட்டோரம் இருந்த 'மே பிளவர்' மரம் முறிந்து, காரின் மீது விழுந்தது.இதில், காரில் இருந்த அஸ்வின், மனைவி காயத்ரி,30, அவரது தம்பி அஜய்,30, அம்மா ரஜினிதேவி,55, தம்பியின் மனைவி ஐஸ்வர்யா, 27, அவரது மகள் சிவன்யா, 4, ஆகியோர், காயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.ரோட்டில் மரம் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீசார், மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X