பொள்ளாச்சி:பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லுாரியில், தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.கல்லுாரியின் ஆலோசகர் சுப்ரமணியம், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''விவேகானந்தர் இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர். எதிர்கால இந்தியாவை வளமாகவும், வலிமையாகவும் மாற்றும் சக்தி, இளைஞர்களிடம் உள்ளது. இதனை இளைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.பேராசிரியர் சர்மிளா, முனைவர் தியாகு மற்றும் அனைத்து பேராசிரியர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி நுாலகர் கவிதா செய்தார்.