கொரோனா வழிகாட்டு நெறிமுறை கடைபிடிங்க! கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
04:09

பொள்ளாச்சி;'பொள்ளாச்சியில் உள்ள கடைகளில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்,' என, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தினமும், 50க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகிறது.இதனை கட்டுப்படுத்த, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, கடைகளுக்கு நோட்டீஸ் வினியோகித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்துகின்றனர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா தொற்று பரவாமல் இருக்க, முகக்கவசம் அணிவது அவசியம். ஆனால், சிலர் கொரோனா பரவல் பற்றி உணராமல், முகக்கவசம் அணிவதில்லை. முகக்கவசம் அணியாதவர்கள், கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.நகரப்பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அரசு விதிமுறைகளை பின்பற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கூட்டம் கூடுவதை தவிர்க்க, அத்தியாவசிய பொருட்கள், ஆர்டரின் பேரில் வாடிக்கையாளர்கள் வீட்டுக்கே சென்று வழங்கலாம்.கடைகளில் பொருட்கள் வழங்கும் போது, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளர், கைகளை சுத்தம் செய்ய, கை சுத்திகரிப்பு கிருமிநாசினி அல்லது சோப் வைத்திருக்க வேண்டும். கை சுத்தம் செய்த பின், மாஸ்க் அணிந்து வருபவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். உடல்வெப்ப நிலை பரிசோதனை செய்து அனுமதிக்க வேண்டும்.பணியாளர்கள், வாடிக்கையாளர்ளுக்கு இருமல், சளி, காய்ச்சல் இருப்பின் உடனடியாக நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். கடையில் பணியாற்றுபவர்கள், கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். ஆய்வுக்கு வரும் அலுவலர்களிடம், தடுப்பூசி சான்றிதழ்கள் காண்பிக்க வேண்டும்.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடைபிடிக்க தவறுபவர்கள் மீது, பொது சுகாதார சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும். ஆறு மாத சிறை தண்டனை அல்லது அபராதம்; அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்குள்ளாவர் என தெரிவிக்கப்படுகிறது.முதல் முறை வழிகாட்டு நெறிமுறை மீறல்களுக்கு, 5,000 ரூபாய் அபராதமும், தொடர் விதிமீறல்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X