உடுமலை;உடுமலை பகுதி கோவில்களில், திருடிய ஒரு சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.உடுமலை குறிஞ்சேரியிலுள்ள ஆண்டாள் நாச்சியார் கோவிலில், கடந்த, 15ம் தேதி இரவு, உள்ளே புகுந்த, 4 பேர் கொண்ட கும்பல், ஆண்டாள் கழுத்தில் அணிந்திருந்த, தங்கத்தாலி, தங்கப்பொட்டு ஆகியவற்றை திருடிச்சென்றனர்.இது குறித்து, உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவைச்சேர்ந்த, மூர்த்தி, 34, நிலக்கோட்டையைச்சேர்ந்த, வேலன்,19, மடத்துக்குளம், போத்தநாயக்கனுாரைச்சேர்ந்த மூர்த்தி, 25 மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இக்கும்பல், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் திருடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.