உடுமலை:மழைநீர் சேமிக்கும் வகையில், ரோட்டோரத்திலுள்ள ஓடை துார்வாரும் பணி நடக்கிறது.மழைக்காலங்களில் பெய்யும் நீரை வீணாக்காமல், மழைநீர் சேமிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், உடுமலை தாராபுரம் ரோடு மற்றும் திருப்பூர் ரோட்டை இணைக்கும் ரோட்டோரத்தில், சின்னவீரம்பட்டி ஊராட்சி சார்பில், வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் வழியாக, துார்வாரும் பணி நடந்து வருகிறது.ரோட்டின் இரு புறமும், மழை நீர் தேங்கும் வகையில், ஓடையில் குழி எடுக்கப்பட்டு வருகிறது.இதன் வாயிலாக, மழை காலத்தில் ரோட்டில் நீர் தேங்காததோடு, பெய்யும் மழை நீர் ரோட்டோர பள்ளத்தில் தேங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.