விழுப்புரம் : எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் தலைமை தாங்கினர்.
எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் தனுசு வரவேற்றார். முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் அற்புதவேல், ஜெ., பேரவை இணைச் செயலாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சண்முகம், எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்து, ஏழை பெண்களுக்கு சேலை மற்றும் அன்னதானம் வழங்கினார்.ஜெ., பேரவை துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்க சேகர், இயக்குனர்கள் வழக்கறிஞர் செந்தில், கலைச்செல்வன், டாக்டர் முத்தையன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம், முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் பாபு, அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.