செஞ்சி : செஞ்சி பகுதியில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் நடந்த விழாவிற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.
செயலாளர் நடராஜன், மகளிரணி மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.பேரவை ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், மனோகரன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.மேல்மலையனுார் தெற்கு ஒன்றியத்தில், செயலாளர் அருண்தத்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சத்யராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்பம்பட்டில் செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பங்கேற்றனர்.விக்கிரவாண்டிநந்திவாடியில் ஒன்றிய செயலாளர் பன்னீர் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் சரவணகுமார், முன்னாள் ஊராட்சித் தலைவர் வீரப்பன், ஒன்றிய தலைவர் பழனி, அணி செயலாளர்கள் மணி, வாசு பிரகாஷ், திருநாவுக்கரசு, கிருஷ்ணன், பழனி, பெரியான், அந்துவான், சந்தோஷ்குமார் பங்கேற்றனர்.பனையபுரத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் முகுந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய அணி செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், ஓம்சக்தி, ராதாகிருஷ்ணன், சுபாகர், சிவகாமி லட்சுமணன், ரேணுகா ராஜவேல், தயாநிதி கண்ணப்பன், முருகேசன், வைரவேல், உதயகுமார், ஜெயமூர்த்தி, செந்தில் பங்கேற்றனர்.திண்டிவனம்அம்மா உணவகம் அருகே முன்னாள் கவுன்சிலர் வடபழனி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, அர்ஜூனன் எம்எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கேடசன், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் நகர செயலாளர் கணேசன், ஜெ.,பேரவை நகர செயலாளர் ரூபன்ராஜ், ரவி, நிர்வாகிகள் ஏழுமலை, மலர் சேகர், சக்திவேல், கார்த்திக், முன்னாள் கவுன்சிலர்கள் சரவணன், விஸ்வநாதன், திருப்பதியார் சங்கர், செந்தில், ஞானவேல், திருவேங்கடம், நிர்வாகிகள் பால்வெங்கடேசன், வழக்கறிஞர் செந்தில், சீத்தா, அன்பு, தேவ ஏழுமலை, பொன்னரசு மோகன், சவுகத், ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.