கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சீதா லட்சுமண ஹனுமன் சமேத கோதண்டராமர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.அதனையொட்டி நேற்று அதிகாலை விஸ்வரூப தரிசனம், சுப்ரபாத சேவை நடந்தது. தீர்த்தவாரிக்காக கோமுகி ஆற்றுக்கு சுவாமி கொண்டு செல்லப்படாமல், கோவிலுக்குள்ளேயே மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரம் செய்யப்பட்டு, விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிக்கப்பட்டது.