திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் சப் இன்ஸ்பெக்டரை கண்டித்து, பா.ம.க.,வினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு நிலவுகிறது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம். இவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாவும், அப்பாவி வன்னியர்களை மீது வழக்குப் பதிவு செய்வதாகவும் வன்னியர் சமூகத்தினர் குற்றம்சாட்டி வந்தனர். சில தினங்களுக்கு முன், பேரங்கியூர் கிராமத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் ஒருதலைபட்டமாக செயல்பட்டதாக இளம்பெண் ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.
இந்நிலையில் நேற்று, திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய வன்னியர் சங்கம் சார்பில், ''சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார், அவர் மீது மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என, திருவெண்ணெயநல்லுார் நகரம் முழுதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.