வள்ளலார் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசன விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
05:12

வடலுார், : வடலுார் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 151ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெரு விழா நேற்று நடந்தது.கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு 151ம்ஆண்டு தைப்பூச பெருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று காலை 7:30 மணிக்கு, தர்ம சாலையில் சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டது. பின், மருதுார், கருங்குழி, மேட்டுக்குப்பத்திலும், காலை 10:00 மணிக்கு, சத்திய ஞான சபையிலும் கொடியேற்றப்பட்டது.நேற்று காலை 6:00 மணிக்கு, சத்திய ஞான சபையில் முதல் ஜோதி தரிசனம் நடந்தது. பின், காலை 10:00 மணி, பகல் 1:00; மாலை 7:00 ; இரவு 10:00 மணிக்கு 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் நடந்தது.

இன்று காலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களை சத்திய ஞான சபை உட்புறம் மட்டும் அனுமதிக்கவில்லை. சபைக்கு வெளியே அமைத்திருந்த பந்தலில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று காலை 6:00 மணி ஜோதி தரிசனத்திற்கு குறைந்த பக்தர்களை அனுமதித்த தகவல் பரவியதும் ஏராளமானவர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், ராதாகிருஷ்ணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவக்குமார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட பலர் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் பரணிதரன், நிர்வாக அதிகாரி ராஜாசரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர். நெய்வேலி டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் வரும் 20ம் தேதி நடக்கும் திருஅறை தரிசன விழாவிற்கு குறைந்த பக்தர்கள் அனுமதிக்கப்படுவர், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், முக கவசம் அணிந்து, நோய் அறிகுறியின்றி வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.பக்தர்கள் ஏமாற்றம்வள்ளலார் அவதரித்த புவனகிரி அடுத்த மருதுாரில் நேற்று தைப்பூச நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிமறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X