ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க... களைக்கொல்லி தெளிக்கும் 'ட்ரோன்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 ஜன
2022
10:36
பதிவு செய்த நாள்
ஜன 19,2022 10:34

ஆனைமலை: ஆனைமலை தாலுகா பகுதியில், ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க, நெல் வயலில் 'ட்ரோன்' பயன்படுத்தி களைக்கொல்லி தெளிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும் விவசாயத்துக்கு உதவும் வகையில், பல்வேறு புதிய வேளாண் கருவிகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் பொறியியல் துறை சார்பிலும், பல நவீன கருவிகள் வாங்கப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன.
ஆனைமலை விவசாயிகள், நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரம் பயன்படுத்தி நடவு செய்து, களைகள் அகற்றி, அறுவடை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை யாரும் களைக்கொல்லி தெளிக்க, 'ட்ரோன்' பயன்படுத்தியது இல்லை.
ஆனைமலை தாலுகாவில் முதல்முறையாக, விவசாயி பட்டீஸ்வரன் வயலில், 'ட்ரோன்' வாயிலாக களைக்கொல்லி தெளிக்கப்பட்டது. விவசாயி பட்டீஸ்வரன் கூறியதாவது:
நெல் நடவு செய்து, 20வது நாளில் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். தற்போது, களைக்கொல்லி தெளிக்க அதிகப்படியான மருந்து, ஆட்கள் தேவைப்படுகின்றனர். மேலும், ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது. வேளாண்துறையினர் அறிவுரைப்படி 'ட்ரோன்' பயன்படுத்தி களைக்கொல்லி தெளித்தேன்.

சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு களைக்கொல்லி தெளிக்க, 250 மி.லி., மருந்து தேவைப்படும், களைக்கொல்லி தெளிப்பான் வாயிலாக ஒருவர், ஐந்து முறை தெளிக்க வேண்டும். தெளிப்பானில் இரண்டு பேர் தண்ணீர் நிரப்ப வேண்டும். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக, 3,500 முதல் நான்காயிரம் ரூபாய் வரையில் செலவாகிறது.
'ட்ரோன்' வாயிலாக களைக்கொல்லி தெளித்தால், ஒரு ஏக்கருக்கு, 125 மி.லி., களைக்கொல்லி மட்டுமே தேவைப்படுகிறது. 'ட்ரோன்'க்கு, 500 ரூபாய் வாடகை மற்றும் ஒரு ஆளுக்கு கூலி கொடுத்தால் போதும்.'ட்ரோன்' வாயிலாக தெளித்ததில், 60 சதவீதம் பணம் மற்றும் நேரம் மிச்சமாகியுள்ளது.களைக்கொல்லி வீணாகாமல், பரவலாக தெளிக்கப்பட்டு நல்ல பலன் கிடைத்துள்ளது. விரைவில் வேளாண் பொறியில் துறையினர் 'ட்ரோன்'களை விலைக்கு வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
19-ஜன-202218:46:58 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எல்லோரும் இலவசங்கள் வாங்க போயிருப்பார்கள். இதுதானே கழங்கங்களுக்கு வேண்டும். மக்களை இப்படியெல்லாம் கையெந்தி வைக்க வேண்டும்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
19-ஜன-202216:13:22 IST Report Abuse
DVRR ஆட்கள் பற்றாக்குறை ????சொல்வதற்கு இப்படி ஒரு ஏமாற்று வார்த்தையை ??? 134.53 கோடி மக்கள் உள்ள இடத்தில்??? இந்தியாவை (3.8 million Sq.km) விட பெரிய (9.3 million Sq.km) பரப்பளவு அமெரிக்கா அதில் வெறும் 34 கோடி மக்கள் அங்கு இது ஓகே
Rate this:
Cancel
19-ஜன-202216:07:28 IST Report Abuse
ஆரூர் ரங் 1972 லேயே கருணாநிதி 😎அன்பில் கும்பல் இது போன்ற விமானம் மூலம் பூச்சிமருந்து தெளித்து 😉வளம் பெற்றது சர்க்காரியா விசாரணை யில் வெளிவந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X