கோவை மாவட்டத்தில், 2,800 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
22:12

கோவை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில், 2,800 பயனாளிகளுக்கு, 21 கோடியே, 65 லட்சத்து, 58 ஆயிரம் ரூபாய்க்கு, தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது, என, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், பெ.நா.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். அங்கு, வளர்ச்சிப் பணிகளைத் துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக, நடந்த விழாவுக்கு கலெக்டர் சமீரன் தலைமை வகித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று, தாலிக்கு தங்கமும், திருமண உதவித்தொகையும் வழங்கி பேசியதாவது:

பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற இலக்குடன், ஏழை பெண்களின் திருமணத்திற்கு, தாலிக்கு தங்கம், 8 கிராம்; பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு, ரூ. 25 ஆயிரம் திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில், நடப்பு நிதியாண்டில், 94 ஆயிரத்து, 700 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 2,800 பயனாளிகளுக்கு, வழங்கப்பட்டுள்ளது.தற்போது 688 பயனாளிகளுக்கு 2 கோடியே 67 லட்சத்து 54 ஆயிரத்து 840 ரூபாய் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

அன்னுார்

குரும்பபாளையத்தில், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில், மொத்தம் 1,040 மீட்டர் நீளத்துக்கு, 65 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில், தார்ச்சாலைகள் அமைக்கும் பணியை, அமைச்சர் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பினர், 120 ஏக்கர் பரப்பளவுள்ள காலிங்கராயன் குளத்தை முழுமையாக துார்வாரி ஆழப்படுத்த கோரிக்கை விடுத்தனர். பெ.நா.பாளையம்நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில், அமுதம் நகர் பிரதான சாலை மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே., நகர் பிரதான சாலை பகுதியில், 52 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணிகளை, அமைச்சர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில், தங்கம் வழங்கப்பட்டது. வீரபாண்டி பேரூராட்சியில், வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார்.

சூலுார்

சூலுார் தாலுகாவுக்கு உட்பட்ட, மோப்பிரிபாளையம், சூலுார், இருகூர், கண்ணம்பாளையம், பள்ளபாளையம் உள்ளிட்ட பேரூராட்சிகளில், ரூ. 5 கோடியே,74 லட்சத்து, 35 ஆயிரம் மதிப்பில், வீதிகளில் ரோடுகள் போடுதல், பேவர் பிளாக்குகள் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, அமைச்சர் பணிகளைத் துவக்கி வைத்தார்.* பாப்பம்பட்டி பிரிவில் நடந்த நிகழ்ச்சியில், 176 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் துறை அலுவலர் தங்கமணி உள்ளிட்ட அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.சுற்றி வளைத்த கட்சி நிர்வாகிகள்!அன்னுாரில் நடந்த விழாவில், அமைச்சரை, கலெக்டர் தவிர மற்ற அதிகாரிகள் நெருங்க முடியாத அளவுக்கு, கட்சி நிர்வாகிகள் முண்டியடித்துக்கொண்டு நின்றனர்.

ஆர்.டி.ஓ., செயற்பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், மின்வாரிய அதிகாரிகள், உதவி இயக்குனர் என, முக்கிய அதிகாரிகள் கூட, பூமி பூஜை நடக்கும் இடத்தில், அமைச்சர் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது அரசு விழாவா, கட்சி விழாவா என, பொதுமக்களோடு சேர்ந்து, அதிகாரிகளும் புலம்பினர்.

கோவைக்கு சிறப்பு நிதி

மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், "கோவை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு, மற்ற மாவட்டங்களிலிருந்து, நோய்த்தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை பெற வருகின்றனர். எனவே, தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கோவை மாவட்ட, வளர்ச்சிப் பணிகளுக்கு முதல்வர் தொடர்ந்து நிதி வழங்கி வருகிறார்.நகராட்சி, பேரூராட்சிகளில் விடுபட்ட பகுதிகளுக்கு, இரண்டாம் கட்டமாக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகின்றன. அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, சிறப்பு நிதிகள் பெற்று பணிகள் நிறைவு செய்யப்படும்" என்றார்.

-நமது நிருபர் குழு-

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X