தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலால் சோதனை மேல் சோதனை! இடுபொருட்கள் வழங்க அரசுக்கு கருத்துரு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
22:18

உடுமலை : தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ள நிலையில், சிறிய இடைவெளிக்கு பிறகு, வேகமாக பரவி வரும் வெள்ளை ஈ தாக்குதல், அவர்களை நிலைகுலைய செய்துள்ளது; வேளாண்துறை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட உடுமலை பகுதி விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.



உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பிரதானமாக உள்ள தென்னை சாகுபடி விவசாயிகள்தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.பருவ மழை முடிந்து, பனிக்காலம் துவங்கியுள்ள நிலையில், தற்போது, மீண்டும் தென்னை மரங்களை தாக்கி, அதிவேகமாக பரவி வரும், வெள்ளை ஈ தாக்குதல் விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ளது.

தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தங்கும், வெள்ளை நிறத்திலான நுண்ணிய ஈக்கள், அவற்றின் சாற்றை உறிஞ்சி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இவை நுாற்றுக்கணக்கில் முட்டையிடுவதோடு, 30 நாட்களில் அபரிமிதமாக பெருகி, பச்சையத்தை உறிஞ்சி, ஓலையின் மீது பூஞ்சாணம் போல் படிந்து விடுகிறது.

மகசூல் பாதிப்பு

தென்னை மரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய வழியில்லாமல், மகசூலும், மரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஓலைகள் பாதித்த நிலையில், தற்போது தென்னங்குருத்து மற்றும் பாலைகளையும் பதம்பார்த்து வருகிறது.வெயில் அதிகரிக்க, அதிகரிக்க, ஈக்கள் பரவுவதும் அதிகரித்து, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், பெரும்பாலான தென்னந்தோப்புகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும், குட்டை ரக தென்னை மரங்கள், இளநீர் மரங்களிலும் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சியால், கடந்த சில மாதங்களாக பாதிப்பை சந்தித்து வரும் விவசாயிகள், வெள்ளை ஈ தாக்குதல் மீண்டும் துவங்கி, வேளாண்துறை சார்பில், எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால், தென்னை விவசாயத்தை காப்பற்ற போராட்டத்தில், ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இடுபொருட்கள் வழங்கப்படும்

வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது :தென்னை மரங்களுக்கு கீழ், களைக்கொல்லி அடிப்பதால், இயற்கை எதிரிகள் இல்லாத நிலையில், வெள்ளை ஈ தாக்குதல் அதிவேகமாக பரவி வருகிறது. இத்தாக்குதல் தென்பட்டால், நீரை வேகமாக பீய்ச்சியடித்தால், அவை கீழே விழுந்து இறந்து விடும்.மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள், 'என்கார்சியா' ஒட்டுண்ணி, வேளாண் பல்கலை பூச்சியியல் துறையில் உற்பத்தி செய்யப்படும்,

'கிரைசோபிட்' எனும், இரை விழுங்கிகளை, ஏக்கருக்கு, 20 எண்கள் வீதம், மரத்தினால் ஆன தட்டி வைத்து, விளக்கெண்ணெய், வேப்பெண்ணை ஆகியவற்றை, மஞ்சள் நிற பாலித்தீன் கவர்கள் கட்டினால், அவற்றில் ஈர்க்கப்பட்டு, ஈக்கள் ஒட்டி விடும்.கிரீஸ் மற்றும் விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை பயன்படுத்தி, இப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

இரவு நேரங்களில், விளக்குப்பொறிகளை அமைத்து, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து உயர் அதிகாரிகள் வழியாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ஒட்டுப்பொறி உள்ளிட்ட இடு பொருட்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளை ஈ தாக்குதலால், பாதிக்கப்பட்ட தென்னை ஓலைகள் சுருண்டு விடுவதால், தடுக்கு பின்னுவதற்கு கூட பயன்படுத்த முடிவதில்லை. காய்ப்புத்திறன் குறைந்து, வருவாய் இழக்கும் விவசாயிகள், ஓலைகளை கூட விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதால், வேதனையில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X