சூலூர் : சுல்தான்பேட்டை அடுத்த ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 47. டிரைவர். நேற்று முன்தினம் காலை, பைக்கில் சென்றுள்ளார். குட்டை அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வக்குமார், 45, முன் விரோதம் காரணமாக, விஜயகுமாரை பாட்டிலால் தாக்கியுள்ளார். பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பினார். அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று, காயமடைந்த விஜயகுமாரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார், செல்வக்குமாரை கைது செய்தனர்.