பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நான்கு தாலுகாக்களில், நேற்று, 239 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட அழகப்பா லே - அவுட், பி.எம்.ஜி., நகர், ஸ்டேட் பேங்க் காலனி, பாலகோபாலபுரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில், 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, கோலார்பட்டி, கோமங்கலம்புதுார், சமத்துார், சீனிவாசபுரம், சின்னாம்பாளையம், தொண்டாமுத்துார், சீலக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பொள்ளாச்சி தாலுகாவில், நேற்று மொத்தம், 172 பேருக்கு, தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.கிணத்துக்கடவு தாலுகாகவுக்கு உட்பட்ட பகுதிகளில், 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.ஆனைமலை தாலுகாவில், நேற்று, ஆனைமலை, கோட்டூர், வேடசெந்தூர், தென்சங்கம்பாளையம், ஆழியாறு, வேட்டைக்காரன்புதூர், திவான்சாபுதூர், ஒடையகுளம் பகுதிகளில், 22 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
தொற்று பாதித்தவர்களுடன் தங்கியிருந்த, 56 பேருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டது.வால்பாறை தாலுகாவில், முடீஸ், கெஜமுடி, பன்னிமேடு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், ஐந்து பேருக்கு தொற்று உறுதியானது.