டெங்குவும், கொரோனாவும் சேர்ந்து 'மிரட்டுது'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
22:59

திருப்பூர் : திருப்பூரில் தொற்று பரவலுடன், டெங்குவும் சேர்ந்து 'மிரட்டுகிறது'. டெங்கு, கொரோனா பரவல் தடுப்பு பணிகளில், மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.



நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தற்போது கொரோனா தொற்று பரவலுடன் டெங்கு காய்ச்சலும் உடன் சேர்ந்து பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது.


* திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கடந்த 2 மாதமாகவே டெங்கு பரவல் அதிகளவில் உள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி, கொசு மருந்து தெளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர தினமும் மண்டல வாரியாக தலா நான்கு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது.

* கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில், சுகாதார பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து கண்காணிக்கப்படுகிறது. நான்கு மண்டலங்களிலும் தலா ஒரு நோய் கண்டறியும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மருத்துவர் குழு செயல்படுகிறது. கொரோனா பரிசோதனைக்கு மாதிரியும் சேகரிக்கப்படுகிறது. இது தவிர நடமாடும் வாகனம் மூலம் பகுதி வாரியாக மாதிரி சேகரிப்பு நடைபெறுகிறது.

மாதிரி சேகரிப்பு அதிகரிக்க திட்டம்

சுகாதார பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:தற்போது பொங்கல் தொடர் விடுமுறையாக உள்ள நிலையில் மாதிரி சேகரிப்பு தினமும் 600 முதல் 800 வரை மட்டுமே உள்ளது. தற்போது பெரும்பாலானோர் திருப்பூர் திரும்பி வரும் நிலையில், மாதிரி சேகரிப்பு அதிகரிக்கப்படும். தற்போதைய நிலவரப்படி மாவட்ட அளவிலான மொத்த தொற்று பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு மாநகராட்சி பகுதியில் என்ற நிலை உள்ளது.

தொற்று பரவல் அதிகரித்து நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், சிகிச்சை அளிக்க ஏதுவாக சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், மாநகராட்சியின் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X