திருப்பூர் : தொற்று பரவலை கட்டுப்படுத்த, 15--18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. பள்ளிகள் செயல்பட்டதால் மாணவர்கள் அவரவர் பள்ளியிலே தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட, தடுப்பூசி செலுத்துவதில் மந்தநிலை உருவாகியுள்ளது.
பள்ளிகள்தோறும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்கள் எண்ணிக்கையை 'எமிஸ்' தளத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், 50 பேருக்கு மேல் ஒரு பள்ளியில் தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் இருப்பின், அவர்களின் நலன் கருதி பள்ளியிலேயே சிறப்பு முகாம் நடத்த கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் திட்டமிட்டுள்ளது.
திருப்பூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 44 பள்ளிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.முகாம் நடைபெறும்பள்ளிகள்பெருமாநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி, கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம், வீரபாண்டி, மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னச்சாமியம்மாள் மேல்நிலைப்பள்ளி, பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, கே.வி.ஆர்., நகர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி.கருவம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, ஏ.வி.பி., டிரஸ்ட், வித்ய விகாஷினி பள்ளி, குமார் நகர் மாநகராட்சி பள்ளி, அங்கேரிபாளையம் கொங்கு மெட்ரிக், கே. செட்டிபாளையம் உயர்நிலைப்பள்ளி, கூலிபாளையம் விகாஷ் வித்யாலயா பள்ளி, சென்சுரி பவுண்டேசன் பள்ளிகளில் முகாம் நடக்கிறது.