திருப்பூர், : திருப்பூரில் உள்ள ரேவதி மெடிக்கல் சென்டரில், 24 மணி நேரம் சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் செயல்படுகிறது.
ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள், வென்டிலேட்டர் வசதி மற்றும் பொது, தீவிர நுரையீரல் நிபுணர்களின் நேரடி சிகிச்சை என, கொரோனா சிகிச்சை பெறுவதற்கான அனைத்து வசதிகளையும், பேக்கேஜ் கட்டண முறையில் வழங்கப்படுகிறது.
மேலும், சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட நவீனதொழில்நுட்ப கருவிகளுடன் கொரோனா பரிசோதனைகள், நுரையீரல் மருத்துவர், பொது மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைகளுக்கு, 4 ஆயிரத்து, 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனையை நோயாளிகள் வீட்டில் இருந்தே மேற்கொள்ள முடியும். கொரோனா சிகிச்சை மற்றும் சந்தேகங்களுக்கு, 97507 55455 எண்ணை அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.