'தாலிக்கு தங்கம்' திட்டம்; பயனாளிகள் சரிபார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
23:12

திருப்பூர் : மாநகராட்சி பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்க ஏதுவாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில், திருமண நிதி உதவி திட்டத்தில், தாலிக்கு தங்கமாக ஒரு சவரன் தங்க காசு மற்றும் பட்டதாரி பெண்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 வரை படித்த பெண்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.சட்டசபை தொகுதி வாரியாக, நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு, திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது. கடந்த, 2019ம் ஆண்டு முதல், நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, இந்தாண்டு உதவி வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்த விண்ணப்பதாரர்களில், தகுதியான பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. திருப்பூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று, சமூகநலத்துறை விரிவு அலுவலர்கள், ஊரக நல அலுவலர்கள், பயனாளிகளை வரவழைத்து, ஆதார், மதிப்பெண் சான்று, வங்கி கணக்கு புத்தக விவரங்களை சரிபார்த்தனர்.

காலை முதல், நுாற்றுக்கணக்கான பெண்கள், ஒரே இடத்தில் சேர்ந்து, சான்றிதழ் சரிபார்த்தனர். கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் சேர்ந்திருந்தனர்.எவ்வித முன்னெச்சரிக்கை, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்றாததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X