விற்பனை மந்தம்; காய்கறிகள் தேக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
23:15

திருப்பூர் : பொங்கல் விடுமுறை முடிந்து பலரும் திருப்பூர் திரும்பாததால், மொத்த மார்க்கெட்டில் காய்கறி விற்பனை மந்தமாகியுள்ளது.



தமிழகத்தில் ஒட்டன்சத்திரத்துக்கு அடுத்தபடியாக, அதிகளவில் காய்கறி விற்பனை நடைபெறும், இரண்டாவது பெரிய மார்க்கெட்டாக, திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் திகழ்கிறது. நாள் ஒன்றுக்கு, 100 முதல், 150 டன் காய்கறி, கீரை, கொத்தமல்லி, தக்காளி, தேங்காய் உள்ளிட்டவை விற்பனைக்கு வருகின்றன. 500 விவசாயிகள், 1,000 வியாபாரிகள், 5,000 வாடிக்கையாளர் வந்து செல்கின்றனர்.

பொங்கலை முன்னிட்டு கடந்த 14, 15ம் தேதி விற்பனை களை கட்டியது. குறிப்பாக, 20 டன் கரும்பு விற்றுத்தீர்ந்தது. முழு ஊரடங்கால், 16ம் தேதி வெறிச்சோடியது. அடுத்த இரு நாட்கள் மார்க்கெட் கூடிய போதும் தொடர் விடுமுறை காரணமாக விற்பனை குறைவாக இருந்தது. விடுமுறை முடிந்து நேற்று பனியன் நிறுவனங்கள், அலுவலகங்கள் செயல்பட துவங்கின. இருப்பினும், நேற்றும் எதிர்பார்த்த விற்பனை இல்லை.

வியாபாரிகள் கூறுகையில்,' பொங்கல் முடிந்து ஒருவாரம் கழித்தே இயல்புநிலை திரும்பும். விளைந்த காய்கறிகளை தொடர்ந்து இருப்பு வைக்க முடியாது என்பதால், விவசாயிகள் கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, காய்கறி வாங்கிய இடத்தில் தற்காலிகமாக நிறுத்தினால், தொழில் கைமாறிவிடும் என்பதால், மொத்த வியாபாரிகளும் வாங்கி இருப்பு வைக்கின்றனர். ஆனால், வாங்கி செல்ல மளிகை கடை வியாபாரிகள் குறைந்தளவே வருகின்றனர்.

காரணம், சொந்த ஊருக்கு சென்ற பலரும் திரும்பததால், கடைகளில் விற்பனை குறைவாக உள்ளது. அவரவர் தேவைக்கானதை மட்டும் வாங்கிக் கொள்கின்றனர். இதனால், மொத்த விற்பனை சற்று குறைந்துள்ளது. ஓரிரு நாளில், மாற்றம் வருமென எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X