ராமநாதபுரம் : பெங்களூரு பெரிய அளவிலான இலந்தை பழம் மற்றும் மஹாராஷ்டிரா விதையில்லாத கருப்பு, பச்சை திராட்சை பழங்கள் ராமநாதபுரத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்கள், காய்கறிகள் பெயரளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன்காரணமாக பெரும்பாலானவை வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து விற்பனைக்கு வருகிறது.
தற்போது சீசனை முன்னிட்டு, பெங்களூரு பகுதியில் விளைவிக்கப்படும் பெரிய இலந்தைபழங்கள் மற்றும் மஹாராஷ்டிரா பகுதியில் விளையும் விதையில்லா கருப்பு, பச்சை திராட்சை பழங்கள் ராமநாதபுரம் சந்தை பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளன. கொய்யா பழம் போல இலந்தை பழம் இனிப்பு, புளிப்பு சுவை கலந்திருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் விரும்பி வாங்குகின்றனர்.ஒரு கிலோ சில்லரை விலையாக ரூ.60க்கும், மொத்தமாக வாங்கினால் கிலோ ரூ.50க்கும் மற்றும்மஹாராஷ்டிரா பச்சை திராட்சை கிலோ ரூ.100க்கும், கருப்பு திராட்சை கிலோ ரூ.200 விற்கப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.