சிவகங்கை அருகே 2000 ஆண்டு முதுமக்கள் தாழிகள்:தொல்லியல் நடைக்குழு ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
01:49

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருளின் எச்சத்தை தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாட்டரசன்கோட்டை அருகே சென்னலக்குடியில் கசிவு நீர் குட்டையின் கரையில் மண் ஓடுகள் நிறைந்திருப்பதாக சிவகங்கை தொல்நடைக்குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். அதன் நிறுவனர் காளிராஜா, தலைவர் தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன், உறுப்பினர் தஞ்சாவூர் தமிழ் பல்கலை தொல்லியல் துறை மாணவி இலக்கிய வடிவு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் மூலம் இறந்தோரை நல்லடக்கம் செய்வது மனித குலத்தின் மாண்பாக இன்றும் இருக்கிறது.ஆதி மனிதர்களிடத்திலும், இறந்தவர்களை பாதுகாப்பாக அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது.அவர்களிடத்தில் உடலை அழியாமல் பாதுகாத்தால் மறுமை வாழ்வுக்கு அது உதவும் என்ற நம்பிக்கையும் இருந்துள்ளது. விலங்குகளிடமிருந்து இறந்த மனித உடலை பாதுகாக்கும் விதமாக 3,500 ஆண்டுகளுக்கு முன் பெருங்கற்களை அடுக்கி கல் வட்டங்கள் உருவாக்கியுள்ளனர்.

அக்காலமே வரலாற்றின் பெருங்கற்காலம். கல்வட்டங்களுக்கு உள்ளே முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. இறந்தவர் உடலை பெரிய பானை (நெற்குதிர்)போன்ற தாழியில் வைத்தோ அல்லது இறப்புக்கு பிறகான எலும்புகளை பாதுகாப்பாக வைக்கவோ இம்மாதிரியான முறைகளை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பின்பற்றியிருக்கலாம். மறுமை வாழ்வு எண்ணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான பொருட்களையும் உள்ளே வைத்து அடக்கம் செய்துள்ளனர்.
சென்னலக்குடி கசிவு நீர் குட்டையின் கரையில் 10 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றன.நிலத்தின் மேற்பரப்பில் ஒரு சிதைவுண்ட தாழியில் ஓடுகளோடு இரும்புப் பொருளின் எச்ச துணுக்கும் உள்ளன. மிகவும் சிதைவுற்றுள்ள இந்த முதுமக்கள் தாழிகள் ஓரிடத்தில் குவியலாக காணப்படுவது மிகுந்த சிறப்புக்குரியது.
அவ்விடத்தில் இரும்பு பொருட்களின் எச்சம் கிடைத்திருப்பதிலும் ஆச்சர்யம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.இங்கு கிடைத்த இரும்பு பொருளின் எச்ச துணுக்குகளை சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X