சேலம்,:சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள பேளூரை சேர்ந்தவர் காமராஜ், 33. இவர் கடந்த செப்., 24ல் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே காரை நிறுத்தியிருந்தார். கார் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த 11 சவரன் நகையை கொள்ளையர் திருடிச் சென்றனர்.
தனிப்படை போலீசார் விசாரித்து பள்ளப்பட்டி, சின்னேரிவயக்காட்டை சேர்ந்த பாண்டியன், 35, காடையாம்பட்டி குமார், 30, அண்ணாமலை, 37, திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் தெருவை சேர்ந்த சங்கர், 40, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். சேலம், விழுப்புரம், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 22 இடங்களில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 83 சவரன் தங்க நகை, ௨ கிலோ வெள்ளி, ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டன. நான்கு பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.