விழுப்புரம்-ஏலச்சீட்டு நடத்தி 50 லட்சம் ரூபாய் ஏமாற்றிய தம்பதி மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் அடுத்த வழுதாவூரைச் சேர்ந்த கிருஷ்ணராஜ் மனைவி ஆனந்தி உட்பட 10க்கும் மேற்பட்டோர் அளித்துள்ள புகார் மனு:புதுச்சேரி மாநிலம், கொடாத்துார் மணவெளியைச் சேர்ந்த வைத்தியாதன், அவரது மனைவி வாசுகி ஆகியோர் சேர்ந்து திருக்கனுார், சித்தலம்பட்டு பகுதியில் ஏலச்சீட்டு நடத்தினர். இதில், நாங்கள் சேர்ந்து பணம் கட்டி வந்தோம்.சீட்டு கட்டிய அனைவருக்கும் மொத்தம் ரூ.50 லட்சத்தை கணவன் - மனைவி ஆகிய இருவரும் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த பணத்தை திருப்பிக்கொடுக்காமல், இருவரும் தலைமறைவாகி விட்டனர். எனவே, வைத்தியநாதன், வாசுகி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு, புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.