விழுப்புரம்-தனியார் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான முகக்கவசம் தயாரிக்கும் பொருட்களை திருடிய பெண் மேற்பார்வையாளர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வானுார் தாலுகா, பூத்துறையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 41; இவர், அதே பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் மேற்பார்வையாளராக புதுச்சேரி, புதுசாரத்தைச் சேர்ந்த வெங்கட் மனைவி மதிவதனி, 30; என்பவர் பணிபுரிந்தார். இவர், நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான முகக்கவசம் தயாரிக்கும் பொருட்களை கள்ளத்தனமாக திருடி, வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில், மதிவதனி மீது ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.