விழுப்புரம்,-விழுப்புரத்தில் சுடுகாட்டில் கிடந்த சாக்கு மூட்டையால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையில் உள்ள சுடுகாட்டில் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளை நிற சாக்கு மூட்டை கிடந்தது. இந்த மூட்டையில் இருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது.இதனால், யாரையாவது கொலை செய்து சாக்கு மூட்டையில் வீசியிருக்கலாம் என கருதிய பொதுமக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் ஆகியோர் நேற்று மாலை 5:45 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்று, சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தனர். அதில், நாய் இறந்து அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.