புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே வேளையில், நேற்று 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 6,116 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், 1,849 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் புதுச்சேரியில் 3 பேர் இறந்தனர். இதுவரை 1896 பேர் இறந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் இறப்பு சதவீதம் 1.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து நேற்று முன்தினம் 895 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தோர் சதவீதம் 90.71 ஆக உயர்ந்தது. மருத்துவமனைகளில் 127 பேர், வீட்டு தனிமையில் 11,217 பேர் என மொத்தம் 11,344 பேர் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று முன்தினம் நடந்த தடுப்பூசி முகாம்களில் முதல் டோஸ் தடுப்பூசி 2,451 பேருக்கும், இரண்டாவது டோஸ் 1,880 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 477 பேர் என மொத்தம் 4,808 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 9,12,066 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தம் 15,08,29 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.