போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு... துவங்கியது ; முதல் நாளில் 201 இளைஞர்கள் பங்கேற்பு;
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
02:26

புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள், 12 ரேடியோ டெக்னீஷியன், 29 டெக் ஹாண்டலர்கள் (படகு ஓட்டுநர்கள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்தாண்டு இறுதியில் வெளியிடப் பட்டது.



இதற்கு விண்ணப்பித்தவர்களில் 14,787 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான உடல்திறன் தேர்வு கோரிமேடு ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, தினசரி 750 பேர் வீதம், வரும் பிப்., 11ம் தேதி வரை 20 நாட்கள் தேர்வு நடக்கிறது.நேற்று நடைபெற்ற தேர்வுக்கு வந்தவர்களில், கொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருந்தவர்களை மட்டும் மைதானத்திற்குள் அனுமதித்து, கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது.

பின், தேர்வு முறை குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.விண்ணப்பதாரர்களுக்கு உடல் எடை, உயரம் மற்றும் மார்பளவு குறித்த உடல் தகுதிகள் அளவிடப்பட்டன.அதை தொடர்ந்து ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் கயிறு ஏறுதல் ஆகிய உடல் திறன் தேர்வுகள் நடைபெற்றது.முறைகேடுகளை தவிர்க்க, தேர்வில் பங்கேற்றவர்களுக்கு 'மைக்ரோ சிப்' பட்டை அணிவித்து, முடிவுகள் 'டிஜிட்டல்' முறையில் பதிவு செய்யப்பட்டன.தேர்வில் பங்கேற்பவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மொபைல் போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணிகள் முழுவதும் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.கொரோனா தொற்று காரணமாக திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு, பிப்., 11ம் தேதிக்கு பிறகு தேர்வு நடத்தப்பட உள்ளது.தேர்வு பணிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், டி.ஐ.ஜி., மிலிந்த் தும்ரே, சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

ஓட்டத்தில் கோட்டைவிட்ட இளைஞர்கள்போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வுக்கு முதல் நாளான நேற்று 500 பேர் அழைக்கப் பட்டிருந்தனர். ஆனால், 217 பேர் மட்டுமே வந்தனர்.அவர்களில் 16 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.எஞ்சிய 201 பேர் மட்டும் உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகளில் பங்கேற்றனர்.

அவர்களில் 55 பேர் மட்டுமே அடுத்தகட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.பெரும்பாலான இளைஞர்கள், 2.50 நிமிடங்களில் கடக்க வேண்டிய 800 மீட்டர் ஓட்டத்தில் கோட்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத் தக்கது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X