போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு... துவங்கியது ; முதல் நாளில் 201 இளைஞர்கள் பங்கேற்பு; | செய்திகள் | Dinamalar
போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வு... துவங்கியது ; முதல் நாளில் 201 இளைஞர்கள் பங்கேற்பு;
Added : ஜன 20, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள், 12 ரேடியோ டெக்னீஷியன், 29 டெக் ஹாண்டலர்கள் (படகு ஓட்டுநர்கள்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்தாண்டு இறுதியில் வெளியிடப் பட்டது.இதற்கு விண்ணப்பித்தவர்களில் 14,787 பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான உடல்திறன் தேர்வு கோரிமேடு ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, தினசரி 750 பேர் வீதம், வரும் பிப்., 11ம் தேதி வரை 20 நாட்கள் தேர்வு நடக்கிறது.நேற்று நடைபெற்ற தேர்வுக்கு வந்தவர்களில், கொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருந்தவர்களை மட்டும் மைதானத்திற்குள் அனுமதித்து, கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது.

பின், தேர்வு முறை குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.விண்ணப்பதாரர்களுக்கு உடல் எடை, உயரம் மற்றும் மார்பளவு குறித்த உடல் தகுதிகள் அளவிடப்பட்டன.அதை தொடர்ந்து ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் கயிறு ஏறுதல் ஆகிய உடல் திறன் தேர்வுகள் நடைபெற்றது.முறைகேடுகளை தவிர்க்க, தேர்வில் பங்கேற்றவர்களுக்கு 'மைக்ரோ சிப்' பட்டை அணிவித்து, முடிவுகள் 'டிஜிட்டல்' முறையில் பதிவு செய்யப்பட்டன.தேர்வில் பங்கேற்பவர்கள், தேர்வு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மொபைல் போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணிகள் முழுவதும் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.கொரோனா தொற்று காரணமாக திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு, பிப்., 11ம் தேதிக்கு பிறகு தேர்வு நடத்தப்பட உள்ளது.தேர்வு பணிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், டி.ஐ.ஜி., மிலிந்த் தும்ரே, சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

ஓட்டத்தில் கோட்டைவிட்ட இளைஞர்கள்போலீஸ் பணிக்கான உடல் தகுதி தேர்வுக்கு முதல் நாளான நேற்று 500 பேர் அழைக்கப் பட்டிருந்தனர். ஆனால், 217 பேர் மட்டுமே வந்தனர்.அவர்களில் 16 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.எஞ்சிய 201 பேர் மட்டும் உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகளில் பங்கேற்றனர்.

அவர்களில் 55 பேர் மட்டுமே அடுத்தகட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.பெரும்பாலான இளைஞர்கள், 2.50 நிமிடங்களில் கடக்க வேண்டிய 800 மீட்டர் ஓட்டத்தில் கோட்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத் தக்கது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X