விழுப்புரம்-விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதியதில் ஈ.வெ.ரா. சிலை உடைந்து விழுந்தது புதுச்சேரியில் இருந்து புனேவுக்கு கண்டெய்னர் லாரி (எம்.எச். 20பிடி 4591) விழுப்புரம் வழியாக நேற்றிரவு 11.50 மணியளவில் சென்று கொண்டு இருந்தது. மகாராஷ்டிராவை சேர்ந்த மகேந்திரா சாப்பலே,52, என்பவர் ஓட்டினார்.லாரி, விழுப்புரம் காந்தி சிலை சிக்னல் வழியாக, சென்னை -திண்டிவனம் நெடுஞ்சாலையை அடைந்து சென்னை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் வழி தவறி, காமராஜ் தெரு வழியாக லாரி சென்றது.அப்போது காமராஜ் சாலை நடுவே உள்ள ஈ.வெ.ரா. சிலை மீது லாரியின் பின்பக்கம் உரசியது. இதில் சிலை அடியோடு பெயர்ந்து விழுந்தது. தகவல் அறிந்து அரசியல் கட்சியினர் குவிந்தனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.