மனைவிக்கு தெரியாமல் மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
02:32

வில்லியனுார்-பள்ளி மாணவியுடன் ஏற்பட்ட தொடர்பால் மனைவியை கொடுமைப்படுத்திய அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் குடும்பத்தினர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் ஜே.எம்.ஐ. கார்டனை சேர்ந்தவர் மகேஸ்வரி(38). இவரும், அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் செல்தில்குமார் என்பவரும் காதலித்து, கடந்த 2006ல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்தின் போது 25 சவரன் நகைகள், பைக் உள்ளிட்ட சீர்வரிசை கொடுத்தனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு மகேஸ்வரியை கொடுமைப் படுத்தி உள்ளனர். இது குறித்து கணவரிடம் கூறியபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை. மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.அப்போது ஆசிரியர் செந்தில்குமார், பள்ளியில் மாணவியுடன் ஏற்பட்ட தொடர்பால், குடும்பத்தினருடன் சேர்ந்து, மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.மாணவிக்கு 18 வயது பூர்த்தியான நிலையில், மனைவிக்கு தெரியாமல் குடும்பத்தினர் உதவியுடன் மாணவியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.இதை அறிந்த மகேஸ்வரி, கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட கணவர் செந்தில்குமார், அதற்கு துணையாக இருந்த மாமனார், மாமியார், மற்றும் கணவரின் சகோதரரர் மீது வில்லியனுார் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில், மாமியார் வத்தீஸ்கா, மாமனார் நாராயணன், கணவரின் சகோதரர் ஞானசுந்தரம் ஆகியோர் மீது, மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அகல்யா வழக்கு பதிந்து விசாரிக்கிறார். இதில் ஞானசுந்தரம், வருவாய் துறையில் ஆர்.ஐ., ஆக பணியாற்றி வருகிறார். மகேஸ்வரிக்கு தற்போது நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X