புதுச்சேரி,-நைனார்மண்டபம் திவான் கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன், 41. நேற்று முன்தினம் அதிகாலை 5.௦௦ மணியளவில், இவரது வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தை பைக்கை ஒருவர் திருட முயன்றார். அவரை பிடிக்க முயன்ற ஜெயகிருஷ்ணன் மீது, மர்ம நபர் கல்லால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர் தப்பிச் சென்றார்.புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.