திண்டிவனம்-திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா ஆய்வு செய்தார்.அப்போது, நிலுவையில் உள்ள வழக்கு ஆவணங்களைப் பார்வையிட்டு வழக்கு விபரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது ஏ.எஸ்.பி.,க்கள் அபிஷேக் குப்தா, கரடூ கருண் உத்தாராவ் மற்றும் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா, சப் இன்ஸ்பெக்டர் விஜயா உடனிருந்தனர்.