விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அடுத்த வெட்டுக்காடு வள்ளலார் மடத்தில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடந்தது.விழாவிற்கு, விழுப்புரம் மாவட்ட காங்., செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மடத்தின் நிர்வாக தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். தைப்பூசத்தை முன்னிட்டு மடத்தில் சத்திய ஞான தீப வழிபாட்டு பூஜை நடந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தென்னவராயன் பட்டு வங்கி தலைவர் முகுந்தன், ஏழைகளுக்கு புடவை, வேட்டிகளை வழங்கினார். பூபதி, நாம தேவன், கார்முகிலன், குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.