விழுப்புரம்-விழுப்புரம் அடுத்த கஞ்சனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1996ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, தமிழாசிரியர் வேலுசாமி தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர்கள் குமார், முருகையன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற வரலாறு ஆசிரியர் மதுரகவி முன்னிலை வகித்தனர். வரலாறு ஆசிரியர் பிரகாஷ் வரவேற்றார்.நிகழ்ச்சியில், ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.முன்னாள் மாணவர்களான வி.ஏ.ஓ., ஜெயராமன், சப் இன்ஸ்பெக்டர் பலராமன், தொழிலதிபர் ஜெயபிரகாஷ், பாக்கியராஜ், சந்திரசேகர், ஜானகிராமன், ஐயப்பன், பாலுசாமி உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை துளசிதரன் ஒருங்கிணைந்தார்.