மாடக்குளம் கண்மாயை பாதுகாக்க வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
02:55


மதுரை : மீன் பிடிப்பதற்காக தண்ணீரை வெளியேற்றுவதை தடுத்து மதுரை மாடக்குளம் கண்மாயை பாதுகாக்க தாக்கலான வழக்கில், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

வழக்கறிஞர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மாடக்குளம் கண்மாய் நீரை நம்பி மாடக்குளம், பழங்காநத்தம், தானத்தவம், விராட்டிபத்து, அச்சம்பத்தில் விவசாயம் செய்கின்றனர். நிலத்தடி நீராதாரமாக உள்ளது. கண்மாயில் சிலர் சட்டவிரோதமாக மீன் குஞ்சுகளை வளர்க்கின்றனர். மீன்களை பிடிக்க சிலருக்கு குத்தகைக்கு விட்டுஉள்ளனர்.

மீன்பிடிப்பதற்காக சட்டத்திற்கு புறம்பமாக தண்ணீரை திறந்துவிடுகின்றனர். இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். நிலத்தடி நீர் மட்டம் குறையும்.மீன்பிடிப்பதற்கு யாருக்கும் மீன்வளத்துறை அனுமதி வழங்கவில்லை. மீன்பிடிப்பதற்காக சட்டத்திற்கு புறம்பாக தண்ணீரை வெளியேற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்மாயின் நீர்வளத்தை பாதுகாக்கக் கோரி மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சூரியமூர்த்தி குறிப்பிட்டார். நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு: கண்மாயில் எவ்வித சட்ட விரோத செயல்களும் நடக்க வில்லை. மீன்பிடிக்க உரிமம் வழங்கவில்லை என தெரிவித்தது. நீதிபதிகள்: மதுரை கலெக்டர், மீன்வளத்துறை துணை இயக்குனர், உதவி இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,24 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X