வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் நேரு யுவகேந்திரா மற்றும் சாம் மகளிர் மன்றம் சார்பில் அடிப்படை தொழில் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சி திட்டத்தில் 3 மாத இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.கேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மன்ற தலைவி காயத்ரி, வழக்கறிஞர் முத்துமணி முன்னிலை வகித்தனர். பயிற்சி வகுப்புகளை ஒன்றிய கவுன்சிலர் தங்கப்பாண்டி துவக்கி வைத்தார். மன்ற செயலாளர் அருணாதேவி நன்றி கூறினார்.