கடலுார்-மின்சார திருத்த சட்டத்தை கைவிடுதல் உள்ளட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., விவசாய சங்கத்தினர் கடலுாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1982 ம் ஆண்டு ஜன., 19ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மூவர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர்.அதை தியாகிகள் நாளாக அனுசரித்தும், பிப்., 23, 24 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்த கோரிக்கைகளான தொழிலாளர் சட்டம் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., விவசாயிகள் சங்கம் சார்பில், கடலுார் அண்ணா பாலம் சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் கருப்பையன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.