விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே வாலிபருக்கு கொலைமிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கம்மாபுரம் அடுத்த சு.கீரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய், 22, இவரை அதேபகுதியைச் சேர்ந்த செல்வம், பாலமுருகன், ஆகியோர் அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், செல்வம் உள்ளிட்ட இருவர் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.